01st January 2025 14:41:12 Hours
591 வது காலாட் பிரிகேட் அதன் 17 வது ஆண்டு நிறைவு விழாவை 13 டிசம்பர் 2024 அன்று 591 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்.ஜே. உபேசேகர ஆர்எஸ்பீ பீஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொடர் நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
ஆண்டு நிறைவு நாளில், கிரிக்கெட் போட்டி மற்றும் கோவில் ஆசீர்வாத பூஜை ஆகியவற்றை படையினர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் வளாகத்தில் போதி பூஜையும் இடம்பெற்றது.
பின்னர், 591 வது காலாட் பிரிகேட் தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன், அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.