01st January 2025 18:18:46 Hours
ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் படையினர் 2025 ஆம் புத்தாண்டின் முதல் வேலை நாளை சம்பிரதாயங்களுக்கு மத்தியில் எளிமையக ஆரம்பத்து வைத்தனர்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக தலைமையக வளாகத்திற்கு வருகை தந்ததை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ தளபதியுடன் இணைந்து தேசியக் கொடி மற்றும் இராணுவ கொடி ஆகியவற்றை ஏற்றி வைத்தனர்.
இவ்விழாவில் தேசிய கீதம் மற்றும் இராணுவ கீதம் இசைத்தல், இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு உயிரிழந்த போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேஎடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் (தூய இலங்கை) அரச பிரமாணத்தை வாசித்தார்.
லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தனது புத்தாண்டு உரையில் அதிமேதகு ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் உறுதியான ஆதரவிற்காக நன்றி தெரிவித்தார். அவர் போர் வீரர்களின் தியாகத்தையும் நினைவு கூர்ந்தார். இராணுவத்தில் ஒழுக்கம், ஒருமைப்பாடு மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், அனைத்து இராணுவத்தினர் சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வளமான மற்றும் சாந்தி மிக்கதான புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட இராணுவத் தளபதி படையினருடன் கலந்துரையாடினார். கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களுடன் கங்காராமய விகாரையின் பிரதமகுரு கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரர் தலைமையில் சமய அனுஷ்டானங்களில் தளபதி கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.