Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2024 16:29:57 Hours

இலங்கை சிங்க படையணியின் வருடாந்த நினைவேந்தல்

இலங்கை சிங்க படையணி 2024 டிசம்பர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில், அவர்களின் குடும்பங்களுக்கு விசேட அங்கீகாரத்துடன் தனது வருடாந்த நினைவேந்தல் விழாவை நடத்தியது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வின் போது, இலங்கை சிங்க படையணி போர் வீரர் நினைவு தூபியில் போர் வீரர்களை நினைவு கூறும் வகையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மத வழிபாடுகள் வரக்காபொல புனித இடங்களில் நடைபெற்றன. இரவுமுழுவதுமான பிரித் பாராயணம் நிறைவடைந்ததை தொடர்ந்து 29 டிசம்பர் 2024 அன்று தானம் வழங்கும் நிகழ்வினை தொடர்ந்து இறந்த போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.