30th December 2024 17:23:35 Hours
மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் 24 டிசம்பர் 2024 அன்று அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் அவரது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பணிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இதன்போது அவரது குடும்பத்தினர் அவருக்கு பணிக்காலம் முழுவதும் ஆற்றிய முக்கிய பங்கையும் இராணுவத் தளபதி பாராட்டினார்.
பதிலுக்கு, மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி வழங்கிய உறுதியான வழிகாட்டல் மற்றும் ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட பாராட்டுச் சின்னமும், அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளும் வழங்கினார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 1990 ஜனவரி 09 அன்று இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பாடநெறி எண் 33 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் 15 ஜூன் 1991 இல் இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை சமிக்ஞைப் படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் அடுத்தடுத்த நிலைகளுக்கு சீராக உயர்த்தப்பட்ட அவர் 2023 ஒக்டோபர் 10 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 04 ஜனவரி 2025 அன்று தனது 55 வயதை எட்டியதும் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறுவதற்கு முன்னர் அவர் தற்போது இலங்கை இராணுவத்தின் பிரதம சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியாகவும் பதவி வகிக்கின்றார்.
3 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைக் கட்டளையாளர், 2 வது (தொண்டர்) சிங்க படையலகு தலைமையகத்தின் குழு கட்டளையாளர், வவுனியா பிரதேச தலைமையகத்தின் சமிக்ஞை அதிகாரி, 7 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தின் சமிக்ஞை அதிகாரி, 521 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தின் சமிக்ஞை அதிகாரி, 54 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் சமிக்ஞை அதிகாரி, 9 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தின் சமிக்ஞை அதிகாரி, 3 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் வாகன போக்கு வரத்து அதிகாரி, 5 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் அதிகாரி கட்டளை, பீரங்கி பிரிகேட் தலைமையகத்தின் சமிக்ஞை அதிகாரி, சமிக்ஞை பாடசாலையின் தலைமை பயிற்றுவிப்பாளர், 215 வது காலாட் பிரிகேட் தலைமையக பிரிகேட் மேஜர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரிகள் கற்றல் நிலையத்தின் பயிற்றுவிப்பாளர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிலிளவல் பிரிவில் அதிகாரி கட்டளை, ஹய்டி ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் சமிக்ஞை பிரிவின் அதிகாரி கட்டளை, 59 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைத்தல்), 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), இராணுவ தலைமையக பிரதம சமிக்ஞை அதிகாரி அலுவலகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (தொடர்பாடல்), இராணுவ தலைமையக பிரதம சமிக்ஞை அதிகாரி அலுவலகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (மின்னணு போர்), இராணுவ தலைமையக பிரதம சமிக்ஞை அதிகாரி அலுவலகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (தொடர்பாடல்), 5 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரி, 1 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையக இராணுவ செயலாளர் அலுவலகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (தரம்- 1), சமிக்ஞைப் பாடசாலையின் தளபதி, 542 வது காலாட் பிரிகேட் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் எல்லை இடர் மதிப்பீட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர், இராணுவ தலைமையக முன்னோக்கு திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் பணிப்பகத்தின் பணிப்பாளர், இராணுவ தலைமையக ஊடக பணிப்பகத்தின் பணிப்பாளர், ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் போன்ற நியமனங்களை தனது பணிக்காலத்தில் வகித்துள்ளார். மேலும் ஓய்வு பெறுகையில் இலங்கை இராணுவத்தின் பிரதம சமிக்ஞை அதிகாரியாகவும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியாகவும் பதவி வகிக்கின்றார்.
அதிகாரிகளின் சிறப்பு பாடநெறி, மோட்டார் போக்குவரத்து அதிகாரிகள் பாடநெறி, நிறுவன கட்டளையாளர் பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணி நிலை பாடநெறி, ஐக்கிய நாடுகளின் பணி பயிற்சி பாடநெறி, சமிக்ஞை அதிகாரிகளின் அடிப்படை பாடநெறி – பங்களாதேஷ், கூகர் பயிற்சி பாடநெறி - ஐக்கிய இராச்சியம், சமிக்ஞை நிறுவன கட்டளையாளர் - இந்தியா, ஒருங்கிணைப்பு நெருக்கடி முகாமைத்துவ பாடநெறி – பின்லாந்து மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரி பாடநெறி – இந்தியா போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கற்கைகளை தனது இராணுவ வாழ்க்கையில் பயின்றுள்ளார்.
மேலும், சிரேஷ்ட அதிகாரி களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பாதுகாப்பு பட்டப்படிப்பு மற்றும் இந்தியா, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாயக் கற்கைகளில் முதுகலை தத்துவம் (எம்பில்) போன்ற உயர் கல்வியையும் கற்றுள்ளார்.