30th December 2024 12:34:12 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2 வது (தொ) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி, 17 வது பொறியியல் சேவைகள் படையணி மற்றும் 8 வது இலங்கை இராணுவ சேவைப் படையணிகளுக்கு 28 டிசம்பர் 2024 அன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு படையணியிலும் கட்டளை அதிகாரிகளால் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது விஜயத்தின் போது, அதிகாரிகள் மற்றும் அனைத்து நிலையினருக்கு அவர்களின் முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி உரையாற்றினார், விஜயத்தின் நிறைவில், அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புகளை பதிவிட்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.