28th December 2024 20:14:26 Hours
இராணுவத் தளபதியும், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு 2 டிசம்பர் 2024 அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி பிரியாவிடை வழங்கியது. பதவிக்காலத்தின் போது, அவரது தலைமைத்துவத்திற்கும் சேவைக்கும் இந்நிகழ்வு கௌரவம் செலுத்தியது.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதியை, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எச்.ஏ. கீர்த்திநாத ஆர்எஸ்பீ கேஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். பின்னர், தளபதிக்கு இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
சம்பிரதாயத்திற்கமைய அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தை தொடர்ந்தது, வெளிச்செல்லும் படையணியின் படைத் தளபதியுடன், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்வின் நினைவாக, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினருடன் குழுப்படம் எடுத்துக்கொண்டார்.
வெளிச்செல்லும் படையணியின் படைத் தளபதி தனது பிரியாவிடை உரையில் போது, தனது பதவிக்காலம் முழுவதும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி உறுப்பினர்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புக்காக நன்றியைத் தெரிவித்தார். படையணியின் கூட்டு சாதனைகளை அவர் பாராட்டியதுடன், படையினர் சிறந்து விளங்குவதற்கான உந்துதலையும் வழங்கினார்.
படையணியின் படைத் தளபதி என்ற வகையில் அவரது புகழ்பெற்ற சேவையின் நிறைவைக் குறிக்கும் வகையில், உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஒப்படைத்ததுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன. இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கவும் இந்நிகழ்வை பார்வையிடவும் கலந்து கொண்டனர்.