Header

Sri Lanka Army

Defender of the Nation

27th December 2024 16:29:04 Hours

2024 சித்திர போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இராணுவத் தளபதியினால் விருதுகள்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் 2024 ம் ஆண்டுக்கான இலங்கை இராணுவ சித்திரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பண ஊக்குவிப்பு மற்றும் சான்றிதழ்கள் 27 டிசம்பர் 2024 அன்று இராணுவத் தலைமையக தளபதி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தினரால் நடாத்தப்பட்ட இப்போட்டி இராணுவ வீரர்களின் சிறப்பான சித்திரங்களை வெளிக்கொணரவும் அவர்களின் படைப்பாற்றலை உயர்த்தவும் நோக்கமாக காணப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:

• லெப்டினன் எஸ்எம்ஜேஎபி சமரகோன் - முதலாம் இடம்

• அதிகாரவாணையற்ற அதிகாரி II ஆர்எம்எஸ் ருவன் குமார - இரண்டாம் இடம்

• அதிகாரவாணையற்ற அதிகாரி II எடி அபேகுணரத்ன - மூன்றாம் இடம்

விளக்கக்காட்சிகளைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி வெற்றியாளர்களுக்கு அவர்களின் சிறந்த பங்களிப்புகளுக்காக தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், வெற்றி பெற்ற உருவப்படங்களை இராணுவத் தலைமையகத்தில் தரை தளத்தில் காட்சிப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.