26th December 2024 12:06:15 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வழிகாட்டுதலின் கீழ், 51 வது காலாட் படைப்பிரிவினரால், நத்தார் மற்றும் புத்தாண்டினை நினைவுகூரும் வகையில் 24 டிசம்பர் 2024 அன்று யாழ். புனித மரியாள் பேராலயத்தில் வருடாந்த நத்தார் பண்டிகை கெரோல் நடாத்தப்பட்டது.
யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பிஎன்ஏ முத்துமலை யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். யாழ். ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி ஜஸ்டின் பெர்னாட் ஞானப்பிரகாசம் அவர்கள் நிகழ்வை கௌரவிக்கும் வகையில் கௌரவ பிரசன்னம் வழங்கினார்.
யாழ். குடாநாட்டில் வாழும் சமூகங்களுக்குள் சமூக மற்றும் கலாசார விழிப்புணர்வை வளர்ப்பதற்காக, பொதுமக்களிடையே நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இவ்வருடாந்த பண்டிகை முன்னெடுக்கப்பட்டது.
பொறியியல் சேவைகள் படையணியின் பராஸ் இசைக்குழுவின் நேரடி இசையுடன் கெரோல் கீதம், மேடை நாடகங்கள் மற்றும் பாடல்கள் போன்ற பல நிகழ்வுகளால் நிகழ்வு அலங்கரிக்கப்பட்டது.
511, 512, 513 வது காலாட் பிரிகேட்கள் மற்றும் கட்டளைப் படையலகுகளின் பங்களிப்புடன் நத்தார் கொண்டாட்டத்தை உருவாக்குவதற்காக 400க்கும் மேற்பட்ட பரிசுப் பொதிகள், இனிப்புகள் மற்றும் பொம்மைகள் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் திருஎல் இளங்கோவன், யாழ்.மாவட்ட செயலாளர் திருஎம் பிரதீபன், விமானப்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சிப்பாய்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.