27th December 2024 08:52:19 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் டிஏ பீரிஸ் பீடிஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் படையணி தனது 75 வது ஆண்டு நிறைவை 2024 டிசம்பர் 20 அன்று படையணி தலைமையகத்தில் கொண்டாடியது.
தேசத்துக்காக உயிர் தியாகம் செய்து வீரமரணம் அடைந்த வீரர்கள், மற்றும் அனைத்து பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள், படையினர், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆசிர்வாதம் வேண்டி, காயமடைந்த போர்வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்தித்து, மகா சங்கத்தினரின் பீரித் பாராணயம் மற்றும் தானம் (காலை அன்னதானம்) வழங்கல் இடம்பெற்றது.
படையணி தின நிகழ்வுகளின் ஒரு அங்கமாக, படையணியின் பெருமையை வெளிப்படுத்தும் சம்பிரதாய அணிவகுப்பு இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவு தபால் தலை மற்றும் முதல் நாள் அட்டை வெளியிடப்பட்டது.
பின்னர், அனைத்து நிலையினருக்கான மதிய உணவு, மாலை இசையும் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது, படைப்பிரிவு சார்பாக தேசிய விளையாட்டு வெற்றிகளைப் பெற்ற இராணுவ வீரர்களுக்கு பணப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
75 வது ஆண்டு நிறைவை யொட்டி, 18 டிசம்பர் 2024 அன்று இலங்கை மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி மற்றும் சாஜன் உணவகத்தில் சிறப்பு இரவு உணவு நடைபெற்றது. இந்நிகழ்வில் படைத் தளபதி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அதற்கமைய நிலைய தளபதி, ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் சிரேஷ்ட அதிகாராவாணையற்ற அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், 20 டிசம்பர் 2024 அன்று, இலங்கை மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் படையணியின் தலைமையகத்தில் இராணுவ குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புத்தகங்கள் மற்றும் உதவித்தொகைகளை விநியோகிக்க ஒரு சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி இலங்கை மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அப்சரா பீரிஸ் தலைமையில் நடைபெற்றது.