Header

Sri Lanka Army

Defender of the Nation

26th December 2024 11:44:04 Hours

இலங்கை இராணுவ குத்துச்சண்டை அணி கிளிபோர்ட் கிண்ண குத்துச்சண்டை போட்டியில் வெற்றி

இலங்கை குத்துச்சண்டை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிளிபோர்ட் சவால் கிண்ணம் 2024 க்கான போட்டி டிசம்பர் 18 முதல் டிசம்பர் 21 வரை கண்டி சஹாஸ் உயன வளாகத்தில் நடைபெற்றது.

74 ஆண் மற்றும் 35 பெண் குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 22 குத்துச்சண்டை அணிகளின் பங்கேற்புடன் இப்போட்டி நடைபெற்றது. போட்டியாளர்களில், இலங்கை இராணுவ குத்துச்சண்டை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 09 தங்கப் பதக்கங்கள், 02 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டது.

விஜயபாகு காலாட் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தி லான்ஸ் கோப்ரல் பீஎஸ்பீஎஸ் பெர்னாண்டோ, தனது சிறப்பான ஆட்டத்திற்காக 2024 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரர் என்ற பட்டத்தை பெற்றார்.

அதற்கமைய, இராணுவ குத்துச்சண்டை அணி 2024க்கான கிளிபோர்ட் சவால் கிண்ணத்தை கைப்பற்றியது.

இராணுவப் பெண் குத்துச்சண்டை அணியும் குறிப்பிடத்தக்க திறமையை வெளிப்படுத்தி, 02 தங்கப் பதக்கங்கள், 04 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றது.

இந்த சாதனைகள் இராணுவ குத்துச்சண்டை அணியின் தலைவர் மேஜர் ஜெனரல் ஏகே ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சாத்தியமானது.