25th December 2024 17:32:30 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 20 டிசம்பர் 2024 அன்று இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த தளபதியை, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி கேணல் ஜே.ஏ.ஜே.ஜயரத்ன கேஎஸ்பீ அவர்கள் வரவேற்றதுடன், தளபதியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் படையினருக்கு உரையாற்றிய தளபதி, தேசிய தேவைகளை பூர்த்தி செய்ய பயிற்சி முறைகளை நவீனமயமாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் பயிற்சிப் பாடசாலையின் தரத்தை உயர்த்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊழியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
பின்னர், இந்த விஜயத்தின் நினைவாக மரக்கன்று நாட்டியத்துடன், குழுப்படம் எடுத்துக் கொண்டார். தளபதியை பாராட்டும் விதமாக அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.