Header

Sri Lanka Army

Defender of the Nation

25th December 2024 17:25:07 Hours

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி முக்கிய அதிகாரிகளை மரியாதை நிமித்தம் சந்திப்பு

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 23 டிசம்பர் 2024 அன்று வடமாகாண சபையின் பிரதம செயலாளர் திரு. எல்.இளங்கோவன், வடமாகாண ஆளுநர் கௌரவ திரு.நாகலிங்கம் வேதநாயகன், யாழ். மாவட்டச் செயலாளர் திரு.எம்.பிரதீபன் மற்றும் அருட்தந்தை ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம் ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இந்த விஜயத்தின் போது, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதிலும், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதிலும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதிலும் இராணுவத்தின் பங்கிற்கு உயரதிகாரிகள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். எதிர்கால முயற்சிகளுக்கு தொடர்ந்து இராணுவ ஆதரவையும் அவர்கள் கோரினர்.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி நல்லெண்ணத்தின் அடையாளமாக பிரமுகர்களுக்கு பாராட்டுச் சின்னங்களை வழங்கினார்.