25th December 2024 17:35:30 Hours
மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.என்.டி. எதிரிசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் 23 டிசம்பர் 2024 அன்று அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பணிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இதன்போது அவரது குடும்பத்தினர் அவருக்கு பணிக்காலம் முழுவதும் ஆற்றிய முக்கிய பங்கையும் இராணுவத் தளபதி பாராட்டினார்.
பதிலுக்கு, மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.என்.டி. எதிரிசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி வழங்கிய உறுதியான வழிகாட்டல் மற்றும் ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட பாராட்டுச் சின்னமும் அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளும் வழங்கினார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.என்.டி. எதிரிசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் 1989 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பாடநெறி 33 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் 15 ஜூன் 1991 இல் இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் நியமிக்கப்பட்டார். பின்னர், அவர் விசேட படையணிக்கு மாற்றப்பட்டு மீண்டும் அவர் இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் அடுத்தடுத்த நிலைகளுக்கு சீராக உயர்த்தப்பட்ட பின்னர், 2023 மே 18 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றார். சிரேஷ்ட அதிகாரி 01 ஜனவரி 2025 அன்று தனது 55 வயதை எட்டியதும் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறுவதற்கு முன்னர் அவர் தற்போது இராணுவ தலைமையகத்தில் பொது பணி பணிப்பாளர் நாயகமாவும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியாகவும் பதவிகளை வகிக்கின்றார்.
6 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் குழு கட்டளையார், போர் பயிற்சி பாடசாலையின் பயிற்றுவிப்பாளர், 6 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் புலனாய்வு அதிகாரி, 6 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிறைவேற்று அதிகாரி, விசேட படையணியின் 3 வது படையணி, 1 வது படையணி மற்றும் முதலாம் படையணியின் நிர்வாகம் மற்றும் ஆதரவு பிரிவுகளின் அதிகாரி கட்டளை, கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 2 (செயல்பாடுகள்/கிழக்கு), தொண்டர் பயிற்சிப் பாடசாலையின் பயிற்றுவிப்பாளர், தொண்டர் பயிற்சிப் பாடசாலையின் தலைமைப் பயிற்றுவிப்பாளர், 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி அதிகாரி, ஹய்டி ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை இலங்கை குழாம் கட்டளை அதிகாரி, 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையக இராணுவ பதவி நிலை பிரதானி அலுவலகத்தி பணிநிலைதிகாரி 1, இராணுவத் தலைமையக உத்தியோகபூர்வ இராணுவ உதவியாளர், பேரிடர் முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவின் (காலி) ஒருங்கிணைப்பாளர், 62 வது காலாட் படைப்பிரிவின் கேணல் (பொதுப் பணி), ஐக்கிய நாடுகளின் பல பரிமானம் ஒருங்கிணைந்த நிலைப்படுத்தல் பணியின் பிரதித் தளபதி, 571 வது காலாட் பிரிகேட் தளபதி, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் தலைமைச் செயலாளர், இராணுவத் தலைமையகத்தில் போர்வீரர்கள் விவகார பணிப்பகத்தின் பணிப்பாளர், இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி, இராணுவத் தலைமையகத்தில் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர், இராணுவத் தலைமையகத்தில் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் போன்ற நியமனங்களை வகித்துள்ளார். மேலும் ஓய்வு பெறுகையில் இராணுவ தலைமையகத்தில் பொது பணி பணிப்பாளர் நாயகமாகவும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியாகவும் பதவி வகிக்கின்றார்.
சிரேஷ்ட அதிகாரிக்கு ரண விக்கிரம பதக்கம் (இரண்டு முறை) மற்றும் ரண சூர பதக்கம் (இரண்டு முறை) ஆகிய விருதுகளும் போர்க்களத்தில் அவரது துணிச்சலைப் பாராட்டி வழங்கப்பட்டுள்ளன.
குழு கட்டளையாளர் பாடநெறி, அடிப்படை புலனாய்வு மற்றும் பாதுகாப்பு கற்கை, விசேட படையணியின் அடிப்படை மற்றும் உயர் பாடநெறி, படையணி நிர்வாக பாடநெறி, அடிப்படை பாராசூட் பயிற்சி பாடநெறி, உளவியல் செயற்பாட்டு பாடநெறி (உடற்பயிற்சி சமநிலை நடை), கணினி பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பதவிநிலை பாடநெறி, கண்காணிப்பாளர் மற்றும் பணிநிலை அதிகாரிகள் பாடநெறி, ஐக்கிய நாடுகளின் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரிகள் பாடநெறி, இலங்கையில் அடிப்படை முதலுதவி பாடநெறி, பாகிஸ்தானில் இளம் அதிகாரிகளின் காலாட்படை பாடநெறி, பாகிஸ்தானில் இடைநிலை தொழில் வாழ்க்கை பாடநெறி, ஹைட்டியில் இராணுவ தூண்டல் பயிற்சி பாடநெறி, மலேசியாவில் உலகளாவிய அமைதி நடவடிக்கைகள் செயல்பாடுகள் பயிற்றுசிப்பாளர் பாடநெறி, சீனாவில் இராணுவ இடைநிலை கட்டளை பாடநெறி மற்றும் உயர்நிலை பாடநெறி மற்றும் இந்தியாவில் பாதுகாப்பு முகாமைத்துவ பாடநெறி உட்பட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கற்கைகளை பயின்றுள்ளார்.
இலங்கையில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் நடாத்தப்பட்ட "கூட்டாட்சி யோசனை" பற்றிய வதிவிடப் பாடநெறி மற்றும் அல்லியன்ஸ் பிரான்சைஸ் டி கொழும் இல் பிரெஞ்சு மொழியில் மேம்பட்ட சான்றிதழ், சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இணைந்து சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் இடம்பெயர்தல் கற்கை பாடநெறி, பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் தொழில்சார் இராஜதந்திரம் மற்றும் உலக விவகாரங்களுக்கான பாடநெறி, பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் மோதல் தீர்வு மற்றும் அமைதி தயார்நிலை முதுகலை பாடநெறி, சர்வதேசக் கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் சர்வதேச உறவுகளுக்கான முதுகலை பாடநெறி போன்ற உயர் கல்வியை சிரேஷ்ட அதிகாரி தொடர்ந்ததுடன், அவர் இந்தியாவில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ கற்கைகளில் முதுகலைப் பட்டத்தையும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டத்தையும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.