22nd December 2024 10:07:05 Hours
உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்.எஸ். தேவப்ரிய யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கவச வாகனப் படையணி தனது 69 வது ஆண்டு நிறைவு விழாவை 2024 டிசம்பர் 15 அன்று ரொக் ஹவுஸ் முகாமில் கொண்டாடியது.
வருகை தந்த படையணியின் படைத் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து, படையணியின் ஸ்தாபக தந்தையுமான ஜெனரல் தேசமான்ய டி.எஸ். ஆட்டிகல எம்விஓ ஐடிசி பீஎஸ்சீ டி லிட்டின் அவர்களின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இலங்கை கவச வாகனப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, படையணியின் படைத் தளபதி ஆண்டு நிறைவு விழா அணிவகுப்பை மதிப்பாய்வு செய்ததுடன், சேவையிலுள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் சிறந்து விளங்கிய படையணிகளுக்கு கிண்ணங்கள் வழங்கப்பட்டன, அதே நேரத்தில் 2024 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த படையணிக்கான கிண்ணத்தை 5 வது உளவுப் படையணி பெற்றுக் கொண்டது. தொழில்முறை பாடநெறிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் சிறந்து விளங்கிய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் படையணியின் படைத் தளபதியினால் கௌரவிக்கப்பட்டனர்.
கொண்டாட்ட நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, இலங்கை கவச வாகனப் படையணியின் படைவீரர் சங்கம் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு ஆறு புலமைப்பரிசில்களை வழங்கியது. மேலும் இலங்கை கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த புத்தக நன்கொடை திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை கவச வாகனப் படையணி குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புத்தகப் பொதிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது இலங்கை கவச வாகனப் படையணியின் 2024 இதழ் வெளியிடப்பட்டது.
திருமதி லாலி கொப்பேகடுவ, ஓய்வுபெற்ற கவச வாகனப் படையணி உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.