Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd December 2024 09:30:11 Hours

57 வது காலாட் படைப்பிரிவினால் பாடசாலை உதவி பொருட்கள் வழங்கல்

புத்தளம் மாவட்டத்தில் கருவலகஸ்வெவ ஸ்ரீ விமலதர்ம பாலர் பாடசாலையைச் சேர்ந்த 42 மாணவர்களுக்கும், தப்போவ ஸ்ரீ விஜய பாலர் பாடசாலையைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கும் ரூபாய் 1,80,000.00 மதிப்பில் பாடசாலை பொருட்களை வழங்கும் திட்டம். 18 டிசம்பர் 2024 அன்று நடைபெற்றது.

57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 143 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.ஏ.டி.டீபீ விமலசேன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

திருமதி ஆஷா டி சில்வா அவர்கள் 16 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டி.எம்.ஏ.யூ திஸாநாயக்க ஆர்எஸ்பீ அவர்கள் படையலகின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் இணைந்து தொண்டு முயற்சியை ஒருங்கிணைத்தார்.

வீ ஹேன பண்ணையின் உரிமையாளர் திரு. என்.எஸ் விக்டர், மாதம்பே மாவட்ட 306 பி1 லயன்ஸ் கழக உறுப்பினர், மஹாவ லயன்ஸ் கழக மற்றும் ஜப்பானில் உள்ள புரா மறுசுழற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. கசுன் பிரசங்க ஜெயசேகர உட்பட பங்களிப்பாளர்கள் வழங்கிய அனுசரணையின் மூலம் இந்த நிகழ்வு சாத்தியமானது.

மேலும், இந்தத் திட்டம் மாணவர்களுக்கு அத்தியாவசியப் பாடசாலை பொருட்களை வழங்குவதையும், அவர்களின் தரமான கல்வியை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.