22nd December 2024 10:04:04 Hours
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் தனது வருடாந்த பொப்பி அணிவகுப்பை 21 டிசம்பர் 2024 அன்று கொழும்பில் காலி முகத்திடலில் ஆரம்பித்து விஹாரமஹா தேவி பூங்கா போர்வீரர் நினைவிடத்தில் நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைவர் லெப்டினன் கேணல் ஏ.கே சியம்பலாபிட்டிய பீஎஸ்சீ எல்எஸ்சீ (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
44 முப்படை சங்கங்களைச் சேர்ந்த 750 முன்னாள் படைவீரர்களை உள்ளடக்கிய குழு அணிவகுப்பு மரியாதையுடன் போர்வீரர் நினைவிடத்தை நோக்கிச் சென்றது. இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் தேசிய மாணவர் சிப்பாய் படையணி ஆகியவற்றின் இராணுவ இசைக்குழுக்கள் இசை வழங்கினர்.
நினைவிடத்தில் முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் அஞ்சலி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வானது இலங்கையின் இராணுவ படையினரின் தியாகங்களை நினைவுபடுத்தும் வகையில் அமைந்ததுடன், தேசத்தின் ஆழ்ந்த மரியாதையையும் வீரர்களுக்கான நன்றியையும் மீண்டும் உறுதிப்படுத்தியது. பொப்பி அணிவகுப்பு நாட்டிற்காக சேவை செய்தவர்களை நினைவுகூருவதற்கும் அஞ்சலி செலுத்துவதற்கும் அடையாளமாகத் தொடர்கிறது.