Header

Sri Lanka Army

Defender of the Nation

20th December 2024 17:04:03 Hours

இராணுவ தளபதி கமாண்டோ பயிற்சி பாடசாலையின் புதிய நீர் நம்பிக்கைப் பயிற்சி வலயத்தை திறந்து வைப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 19 டிசம்பர் 2024 அன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் நம்பிக்கை பயிற்சி வலயத்தை திறந்து வைத்துடன் இது குடாஓயா கமாண்டோ பயிற்சி பாடசாலையில் கமாண்டோ படையணியின் பயிற்சி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த வசதி இராணுவத்தின் நவீனமயமாக்கல் முயற்சிகளையும் குறிக்கிறது, ஏனெனில் இது இலங்கை இராணுவத்திற்கு ஒரு தனித்துவமான மற்றும் புதுமையானது இது பிராந்திய மட்டத்தில் கூட அரிதாகவே காணப்படுகிறது.

வருகை தந்த இராணுவ தளபதியினை 53 வது காலாட் படைப்பிரிவு தளபதியும் கமாண்டோ படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ் விக்கிரமரத்ன ஆர்எஸ்பீ அவர்களால் அன்புடன் வரவேற்றார். கமாண்டோ படையணி படையினரின் சம்பிரதாயமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து பயிற்சி வலயத்தை முறைப்படி திறந்து வைத்துடன் பெயர் பலகையினை இராணுவத் தளபதி திறைநீக்கம் செய்து வைத்தார்.

கமாண்டோக்களின் சின்னமான மெரூன் தலைகவசத்தினை பெற்றுக்கொள்வதில் ஒரு முக்கிய சவாலான நம்பிக்கை சோதனைத் பாய்ச்சலை எளிதாக்குவதற்கு நீர் நம்பிக்கைப் பயிற்சி வலயம் நிறுவப்பட்டது, இதன் மூலம் கமாண்டோ பயிற்சி பாடசாலையின் பயிற்சி உட்கட்டமைப்பை கணிசமாக மேம்படுத்துகிறது.

இந்த திட்டம், ஆரம்பத்தில் மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் கமாண்டோ படையணி படைத்தளபதியாக பதவி வகித்த காலத்தில் முன்மொழியப்பட்டதுடன், தளபதியின் சிறப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது. கமாண்டோ பயிற்சி பாடசாலையின் தளபதி மற்றும் சிப்பாய்களின் ஒத்துழைப்புடன், பொறியியல் சேவைகள் படையணியின் நிபுணத்துவத்தின் மூலம் நீர் நம்பிக்கைப் பயிற்சி வலயம் வெற்றிகரமாக நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கமாண்டோ படையணி படையினரினால் புதிதாக நிறுவப்பட்ட நீர் நம்பிக்கைப் பயிற்சி வலயத்தினை பயன்படுத்துவதில் அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் திறமை செயன்முறை விளக்கம் இடம்பெற்றதுடன் அதைத் தொடர்ந்து கள ஆய்வும் இடம்பெற்றது. பின்னர், இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் கமாண்டோ படையணி படைத்தளபதி அவர்களினால் இராணுவத் தளபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் எண்ணங்களை பதிவிடலுடன் விழா இனிதே நிறைவுற்றது. இராணுவ பதவி நிலை பிரதானியும் சிங்க படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, பிரதான பதவி நிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.