21st December 2024 17:00:10 Hours
பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் வைகேஎஸ் ரங்கிக பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்கள் 5வது பொறியியல் சேவைகள் படையணி மற்றும் 11 வது பொறியியல் சேவைகள் படையணிக்கு 2024 டிசம்பர் 15 மற்றும் 17 ம் திகதிகளில் விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த அவரை 5வது பொறியியல் சேவைகள் படையணி மற்றும் 11 வது பொறியியல் சேவைகள் படையணிகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு படையினர் அதிகாரி கட்டளை பணி நிலை அதிகாரி I (பதில்) ஆகியோர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து, ஒவ்வொரு இடத்திலும் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் குழு படம் எடுத்து கொண்டதுடன் முகாம் வளாகத்தை பார்வையிட்ட அவர் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தில் கலந்துகொண்டதுடன் படையினருக்கு உரையாற்றினார்.
விஜயத்தின் இறுதியில், வருகை தந்த பொறியியல் சேவைகள் பணிப்பாளர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன் அவர் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார். இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.