20th December 2024 16:00:38 Hours
முல்லைத்தீவு வெள்ளை முள்ளிவாய்க்கால் கடற் கரையில் 19 டிசம்பர் 2024 அன்று தரையிறங்க முயன்ற 102 மியன்மார் அகதிகளை ஏற்றிச் வந்த படகு இராணுவம் (593 வது காலாட் பிரிகேட் மற்றும் 6 இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி) மற்றும் கடற்படையின் படையினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.
பின்னர் கடற்படையினரின் பாதுகாப்புடன் படகு திருகோணமலை துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கமைய 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆரஎஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 593 வது காலாட் பிரிகேட் படையினரால் அகதிகளுக்கு சமைத்த உணவு, உலர் உணவுகள், நீர் மற்றும் ஏனைய சுகாதார வசதிகள் வழங்கப்பட்டன.