20th December 2024 16:18:58 Hours
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், உளவியல் தொடர்பான விரிவுரை 18 டிசம்பர் 2024 அன்று 4 வது இலங்கை பீரங்கி படையணி விரிவுரை மண்டபத்தில் நடத்தப்பட்டது.
ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் லெப்டினன் கேணல் ஈஏஏஎஸ் சாமிந்த அவர்கள் "இராணுவ இலக்கியத்தின் மூலம் சிப்பாய்களை ஊக்கப்படுத்துதல்" என்ற தலைப்பில் விரிவுரை ஆற்றினார். இராணுவ இலக்கியத்தின் முக்கியத்துவத்தை இவ்விரிவுரை வலியுறுத்தியது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.