19th December 2024 15:05:53 Hours
இராணுவ படையணிகளுக்கு இடையிலான அணிநடை மற்றும் அணிநடை கோது போட்டி – 2024 இன் பரிசளிப்பு விழா 2024 டிசம்பர் 18 அன்று பனாகொட இலங்கை இலேசாயுத காலாட் படையணி அணிவகுப்பு சதுக்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.
6 வது இலங்கை பீரங்கி படையணி அணிவகுப்பு சதுக்கத்தில் 2024 ஆகஸ்ட் 26 முதல் செப்டெம்பர் 02 வரை நடைபெற்ற போட்டிகளில், ஒழுக்கம் மற்றும் சிறந்து விளங்கும் இராணுவத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தின.
அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மற்றும் ஆளனி நிர்வாக பணிப்பக பணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.
வருகையை அடுத்து, பிரதம அதிதிக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், இராணுவக் கீதம் இசைத்தலின் பின்னர், மறைந்த அனைத்து போர் வீரர்களையும் நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனையடுத்து, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் சம்பிரதாய இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
சிறிது நேரத்திற்குப் பிறகு பல்வேறு படையணிகளை சேர்ந்த இராணுவ வீரர்கள் ஆரவாரம் மற்றும் கைதட்டல்களுக்கு மத்தியில் பார்வையாளர்கள் முன்னிலையில் அணிநடை மற்றும் இசைக்குழு காட்சிகளில் தங்கள் அற்புதமான திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதனை தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இராணுவ வரலாற்றில் முதல்முறையாக, சிறப்பான தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான சிறப்பு பதக்கங்கள் கிண்ணங்களையும் பரிசுகளை இராணுவத் தளபதி வழங்கினார். விருதுகள் வழங்கப்பட்ட பின்னர், வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்த தளபதி அவர்களுடன் குழு படம் எடுத்து கொண்டார்.
கல்வி அமைச்சின் அனுமதியுடன், தேவி பாலிகா பெண்கள் கல்லூரி, ஆனந்த கல்லூரி, றோயல் கல்லூரி கொழும்பு, தர்மாசோக கல்லூரி, மலியதேவ பெண்கள் கல்லூரி, மகாமாய பெண்கள் கல்லூரி, யசோதரா தேவி பெண்கள் கல்லூரி, விஜய கல்லூரி, விதுர கல்லூரி, திஸ்ஸ மத்திய கல்லூரி, தமிழ் மத்திய கல்லூரி வவுனியா, புனித தோமஸ் கல்லூரி மாத்தளை, சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி கொழும்பு, நாலந்த கல்லூரி கொழும்பு, மஹாநாமா கல்லூரி கொழும்பு, லும்பினி கல்லூரி, கரந்தெனிய மத்திய கல்லூரி, இக்ரா முஸ்லிம் கல்லூரி பூனானி, ஹோமாகம மத்திய கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி,பாதுகாப்புக் கல்லூரி, மற்றும் அனுலா பெண்கள் கல்லூரி உட்பட 21 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்நிகழ்வைக் கண்டுகளித்தன. ஹெர்மன் லூஸ் மற்றும் டி சொய்சா கிண்ண வெற்றியாளர்கள், பயிலிளவல் படைப்பிரிவுகள், பாடசாலை இசைக்குழுக்கள் மற்றும் மாணவர் படையணி குழுக்கள் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மாணவர்களுக்கு அணிநடை போட்டியின் மூலம் இராணுவத்தின் ஒழுக்கம் மற்றும் துல்லியத்தை அனுபவிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பயிற்சிப் போட்டியின் மூலம் நிரூபிக்கப்பட்டபடி, இராணுவத்தால் நிலைநிறுத்தப்பட்ட மதிப்புகள் மற்றும் குழுப்பணி, கவனம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பான ஆழமான புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதையும் இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டிருந்தது.
இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்க படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, பிரதி பதவி நிலை பிரதானி, சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் அழைக்கப்பட்ட 21 பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் இந்த அரிய நிகழ்வினை கண்டுகளித்தனர். விருது பெற்றவர்கள்
சிறந்த அணிநடை அணி - ஆண்கள்
முதலாம் இடம் – இலங்கை இலேசாயுத காலாட் படையணி
இரண்டாம் இடம் – கெமுனு ஹேவா படையணி
சிறந்த அணிநடை அணி -பெண்கள்
முதலாம் இடம் – இலங்கை இராணுவ மகளிர் படையணி
இரண்டாம் இடம் – இலங்கை பொலிஸ் படையணி
சிறந்த வாத்திய குழு
முதலாம் இடம் – இலங்கை இலேசாயுத காலாட் படையணி
இரண்டாம் இடம் – இலங்கை பொறியியல் படையணி
சிறந்த அணிநடை கோது குழு
முதலாம் இடம் – இலங்கை இலேசாயுத காலாட் படையணி
இரண்டாம் இடம் – கெமுனு ஹேவா படையணி
சிறந்த அணிநடை பயிற்றுவிப்பாளர்
முதலாம் இடம் – அதிகாரவாணையற்ற அதிகாரி II ஐ.ஜீ.எஸ்.பி.ஜே இஹலகெதர, இலங்கை பொறியியல் படையணி
சிறந்த கட்டளையாளர் - ஆண்கள்
முதலாம் இடம் – கெப்டன் எஸ். அர்ஜூனா, இலங்கை கவச வாகன படையணி
சிறந்த கட்டளையாளர் -பெண்கள்
முதலாம் இடம் – கெப்டன் எம். தென்னகோன், இலங்கை இராணுவ மகளிர் படையணி
சிறந்த வாத்திய குழு தலைவர்
முதலாம் இடம் – சார்ஜன் ஏ.ஜீ.டீ.யூ. விஜேரத்ன, கஜபா படையணி