16th December 2024 18:49:55 Hours
19 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி படையினரால் 14 டிசம்பர் 2024 அன்று சிவனொளிபாதமலை வழிப்பாட்டை தொடங்கும் முகமாக மலை உச்சியில் வைக்கும் சுமன சமன் சிலை, புனித கலசம் மற்றும் மரியாதைக்குரிய சாதனங்களை ஊர்வலத்தில் எடுத்து செல்லும் ஊர்வலத்திற்கு தங்கள் உதவிகளை வழங்கினர். அது சிவனொலிபாதமலை வழிபாட்டை தொடங்குவதைக் குறிக்கும்.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி, 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 642 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 19 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்கேற்றார்.