Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2024 18:08:33 Hours

பாதுகாப்பு பிரதி அமைச்சர் இராணுவ தலைமையகத்திற்கு வருகை

புதிய பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபீஏ ஜயசேகர (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2024 டிசம்பர் 16 அன்று இராணுவ தலைமையகத்திற்கு உத்தியேகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

அவர் வருகை தந்த பாதுகாப்பு பிரதி அமைச்சரை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேஎடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ ஆகியோர் வரவேற்றனர். இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க, கெமுனு ஹேவா படையணி படையினரால் பிரதி அமைச்சருக்கு கௌரவிப்பு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் முதன்மை பணிநிலை அதிகாரிகள் வருகை தந்த பிரமுகர்களுக்கு தங்களை அறிமுகம் செய்துகொண்டதுடன், இராணுவத் தலைமையகத்தின் மண்டபத்தில் நிகழ்வைக் குறிக்கும் வகையில் குழுப் படமும் எடுக்கப்பட்டது.

தளபதி அலுவலகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் பரஸ்பர நலன் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர். இதனைத் தொடர்ந்து, மாநாட்டு மண்டபத்தில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களால் நடத்தப்பட்ட விளக்கமளிக்கும் அமர்வில் பிரதி அமைச்சர் கலந்து கொண்டார். இராணுவத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால முன்னுரிமைகள் தொடர்பாக அவருக்குத் விளக்கமளிக்கப்ட்டது.

இராணுவத் தலைமையகத்தில் படையினருக்கு தனது முதல் உரையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர், நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இராணுவத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பாராட்டினார். சவால்களை எதிர்கொள்வதில் செயல்பாட்டுத் திறன் மற்றும் ஒழுக்கத்தை நிலைநிறுத்த அனைத்து அணிகளையும் ஊக்குவிப்பதோடு அமைதி மற்றும் நிலையை பேணுவதில் இராணுவத்தின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார்.

இந்த விஜயத்தை நினைவுகூரும் வகையில் இராணுவத் தளபதி பிரதி அமைச்சருக்கு நினைவுச் சின்னம் வழங்கியதுடன், அதனைத் தொடர்ந்து அனைத்து நிலையினருக்குமான தேநீர் ஒன்றுகூடலுடன் நிகழ்வு நிறைவுற்றது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் தனது கருத்துக்களை அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டார்.

இந் நிகழ்ச்சியில் முதன்மை பணி நிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.