16th December 2024 18:57:35 Hours
இலங்கை பீரங்கி படையணியின் பிரிகேடியர் எம்ஜேஆர்எச் மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜீ அவர்கள் இராணுவ ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராகவும் இராணுவ பேச்சாளராகவும் 2024 டிசம்பர் 16 இன்று உத்தியோகபூர்வ நிகழ்வில் கடமைகளை பொறுப்பேற்றார்.
சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் பிரிகேடியர் எம்ஜேஆர்எச் மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜீ அவர்கள் தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். சம்பிரதாயத்திற்கு இணங்க, ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் குழு படம் எடுத்துகொண்டார். பின்னர் அவர் அதிகாரிகள் மற்றும் படையினருக்கு உரையாற்றியதுடன் பணிப்பகத்திற்கான தனது எதிர்கால திட்டங்களை எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தில் கலந்துகொண்டார்.
ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாடுகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் மற்றும் இராணுவப் பேச்சாளர் ஆகிய பதவிகளை ஏற்கும் முன்னர், அவர் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் சிரேஷ்ட பணிநிலை அதிகாரியாக பதவி வகித்தார்.
ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.