16th December 2024 18:50:55 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அடிப்படை நீச்சல் பாடநெறி எண். 22 அனுராதபுர வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக நீச்சல் தடாகத்தில் 5 நவம்பர் 2024 முதல் 13 டிசம்பர் 2024 வரை நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் 21 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இப் பயிற்சியில் இலங்கையின் உயிர்காக்கும் சங்கத்தால் வழங்கப்பட்ட நீர் பாதுகாப்பு மற்றும் சீபீஆர் (இதய நுரையீரல் புத்துயிர்) ஆகியவற்றுடன் சர்வதேச உயிர்காக்கும் சான்றிதழை அதிகாரி ஒருவரும் 30 சிப்பாய்களும் பெற்றுகொண்டனர். 4 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் சிப்பாய் ஜேஏஎம் லக்ஷான் தனது சிறந்த செயல்பாட்டிற்காக சிறந்த மாணவர் என்ற பட்டத்தைப் பெற்றார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.