15th December 2024 13:25:50 Hours
தெஹியத்தகண்டி - அரலகங்வில பி- 517 பிரதான வீதியில் கதிரபுர பாலத்திற்கு அருகில் 2024 டிசம்பர் 14 அன்று பிற்பகல் 03.30 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது. கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 23 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 231 வது காலாட் பிரிகேடின் கீழ் இயங்கும் 12 வது கெமுனு ஹேவா படையலகின் இரண்டு அதிகாரிகள் மற்றும் பத்து சிப்பாய்கள் உள்ளடக்கிய ஒரு குழு, வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து உடனடியாக வீதியை சீர் செய்தது பொதுமக்களுக்கான போக்குவரத்து வசதியை அமைத்துக் கொடுத்தனர்.