15th December 2024 13:37:54 Hours
561 வது காலாட் பிரிகேட் தனது 15 வது ஆண்டு நிறைவை 2024 டிசம்பர் 07 அன்று தோழமை மற்றும் அதன் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் பெருமைமிக்க பாரம்பரிய நிகழ்வுகளுடன் நினைவுகூர்ந்தது. 561 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிடி பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் இந்த கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.
பிரிகேடின் தொடர்ச்சியான வெற்றிக்காகவும் அதன் பணியாளர்களின் நல்வாழ்வுக்காகவும் ஆசீர்வாதம் கோரும் புனித போதி பூஜையுடன் நாள் தொடங்கியது. 561 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிடி பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களை கௌரவிக்கும் வகையில் சம்பிரதாயபூர்வமாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரிகேடியர் பிடி பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் பிரிகேடின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை பாராட்டினார். மேலும் அனைத்து நிலையினருக்கும், எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளவிருக்கும் சாதனைகளுக்கு அவர்களை தயாராக இருக்கும் அதே வேளையில் பிரிகேடின் மதிப்புகளை நிலைநிறுத்தவும் வலியுறுத்தினார்.
இந்த கொண்டாட்டங்களுடன், பிரிகேடின் அனைவருக்குமிடையில் நட்புறவு மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் வகையில் அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு விருந்துபசாரம் நடைபெற்றது. மேலும் மகிழ்ச்சி மற்றும் ஓய்வை இசை நிகழ்ச்சி வழங்கியதுடன், படையினரின் உடல் தகுதி, குழுப்பணி மற்றும் போட்டி மனப்பான்மையை வளர்க்கும் வகையில் கரப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. பிரிகேடின் ஆற்றல் மிக்க உணர்வை வெளிப்படுத்தும் நிகழ்வுகளுடன் அன்றய நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.