14th December 2024 17:53:23 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் 27 வது படைத்தளபதியாக 2024 டிசம்பர் 12 அன்று பொரளையில் உள்ள படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த தளபதியை படையணி நிலைய தளபதி வரவேற்றதுடன் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, படையணியின் வீரமரணம் அடைந்த வீராங்கனைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போர் வீரர் நினைவு தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர், படையணி தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் முன்னிலையில் சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் படைத்தளபதி உத்தியோகபூர்வமாக தனது புதிய கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
அன்றைய நிகழ்வின் ஒரு பகுதியாக, சிரேஷ்ட அதிகாரி படையினருக்கு உரையாற்றியதுடன் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்திலும் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.