Header

Sri Lanka Army

Defender of the Nation

14th December 2024 08:15:02 Hours

ஈகிள்ஸ் சவால் கிண்ண போட்டியின் வெற்றிக் கிண்ணம் இராணுவத்திற்கு

இலங்கை விமானப்படையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஈகிள்ஸ் சவால் கிண்ண காற்பந்து போட்டியானது 2024 டிசம்பர் 10 அன்று ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நிறைவடைந்தது.

இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை அணிகளுக்கிடையில் இறுதிப் போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இராணுவ அணி 4-2 என்ற கோல் கணக்கில் சம்பியனானதுடன், இலங்கை கடற்படை இரண்டாம் இடத்தைப் பிடித்துக் கெண்டது.