13th December 2024 06:00:38 Hours
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் பயிற்சி நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக "இலங்கையில் ஆபத்தான போதைப்பொருள் பாவனையின் தற்போதைய பிரச்சினைகள்" என்ற தலைப்பிலான விரிவுரையை 12 டிசம்பர் 2024 அன்று 4 வது இலங்கை பீரங்கி படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
இவ்விரிவுரையை ஊடகப் பேச்சாளரும் தேசிய அபாயகரமான மருந்துகள் கட்டுப்பாட்டு சபையின் (பொது பாதுகாப்பு அமைச்சு) கல்வி/தகவல் அதிகாரியுமான திரு.ஐ.எம்.சீ.பீ. கருணாரத்ன மற்றும் ஆலோசனை உளவியலாளர் திருமதி. எஸ். நில்மினி அபேசேகர ஆகியோர் நடாத்தினர்.
போதைப்பொருள் அபாயத்தைக் குறைத்தல், தடுப்பு திட்டம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் உளவியல் தாக்கம் போன்ற தலைப்புகளில் விரிவுரை வழங்கப்பட்டது. பயிற்சி அமர்வில் மொத்தம் 08 அதிகாரிகள் மற்றும் 102 சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.