Header

Sri Lanka Army

Defender of the Nation

11th December 2024 20:02:18 Hours

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியின் தலைமையில் பழைய மாணவர் ஒன்றுகூடலில் இலங்கை இராணுவப் பிரதிநிதிகள் குழு இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியின் பழைய மாணவர் சந்திப்பு

2024 டிசம்பர் 6 தொடக்கம் 9ம் திகதி வரை தெஹரதுண் இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியின் 86 மற்றும் 87 ஆம் பாடநெறிகளின் மாணவர்களிடையே உறவுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தியது.

இந்திய இராணுவம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இந்திய அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஏ.டி.டபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் டபிள்யூஎச்கேஎஸ் பீரிஸ் (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, மேஜர் ஜெனரல் எல்சீஆர் ஜயசூர்ய (ஓய்வு) ஆர்டபிள்யூபீ என்டிசீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் இராணுவ மருத்துவமனையின் முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்எம்ஜேபீ ரத்நாயக்க ஆர்எஸ்பீ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி லெப்டினன் ஜெனரல் சந்தீப் ஜெயின் அவர்களின் அன்பான வரவேற்புடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. ஆரம்ப உரையாடலை தொடர்ந்து, வருகை தந்த தூதுக்குழுவினர் இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியில் நடத்தப்பட்ட பயிற்சித் திட்டங்கள் தொடர்பாக வழிகாட்டுதலில் கலந்துகொண்டனர். பின்னர், தூதுக்குழுவின் தலைவர், சிறந்த இந்திய இராணுவ தலைவர் பீல்ட் மார்சல் சாம் மனிக்க்ஷே எம்சி அவர்களின் நினைவு தூபிக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வில் பங்கேற்றார், இந்நிகழ்வில் நிறுவனத்தில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

பிரதிநிதிகள் குழு பின்னர் இந்திய இராணுவ கல்வியற் கல்லூரிக்கு விஜயம் செய்து, தற்போது பயிற்சியில் இருக்கும் இலங்கை பயிலிளவல் உட்பட வெளிநாட்டு பயிலிளவல் அதிகாரிகளுடன் உரையாடினர். இந்த விஜயத்தின் சிறப்பம்சமாக, தூதுக்குழுவின் தலைவர் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் 800க்கும் மேற்பட்ட பயிலிளவல் அதிகாரி கூட்டத்தில் உரையாற்றினர், இராணுவத் தலைமை மற்றும் தொழில்முறை மேம்பாடு தொடர்டபான நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

பயணத் திட்டத்தில் விளையாட்டு நடவடிக்கைகளும் அடங்கும். உத்தியோகபூர்வ சந்திப்பின்போது, பிரதிநிதிகள் குழு தெஹரதுண் சின்னமான புத்தர் கோவில், தெஹரதுண் மற்றும் அழகிய மலைப்பிரதேசமான முசோரி ஆகியவற்றில் உள்ளூர் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர். ஒரு சமூக மாலை இரு படைகளுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்தியது.

இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியின் முன்னாள் மாணவர்களிடையே தொழில்முறை உறவுகளை வலுப்படுத்தும் அதே வேளையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை இந்த விஜயம் எடுத்துக்காட்டானது. மேலும், ஆறு இலங்கை மேஜர் ஜெனரல்கள் மற்றும் இந்தியாவின் பிரிகேடியர் ஆகியோரைக் கொண்ட முதல் மிகப்பெரிய தூதுக்குழு இதுவாகும்.