11th December 2024 13:52:21 Hours
12 வது காலாட் படைப்பிரிவு படையினர் வெளிச்செல்லும் 12 வது காலாட் படைப்பிரிவின் 17 வது தளபதியான மேஜர் ஜெனரல் ஜேஎஸ்பிடபிள்யூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு 2024 டிசம்பர் 06 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கினர்.
இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க, வெளிச்செல்லும் தளபதிக்கு 12 வது கஜபா படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
படைப்பிரிவின் கட்டளை பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுகளின் அனைத்து படையினருக்கு உரையாற்றிய அவர், தனது பதவிக்காலத்தில் அவர்களின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு பாராட்டு தெரிவித்தார். அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் பங்குபற்றினர்.