Header

Sri Lanka Army

Defender of the Nation

10th December 2024 07:56:25 Hours

புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

39வது பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் 2024 டிசம்பர் 09 இராணுவ தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மகா சங்க உறுப்பினர்களின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில், சிரேஷ்ட அதிகாரி தனது புதிய கடமைகளை ஏற்றுக்கொள்வதன் அடையாளமாக தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

இந்த நியமனத்திற்கு முன், அவர் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார். விழாவில் பிரதம பதவி நிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.