09th December 2024 19:26:03 Hours
21 வது இலங்கை சிங்க படையணி தனது 16 வது ஆண்டு நிறைவை 2024 டிசம்பர் 4 அன்று 21 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எம்பி புஞ்சிஹேவா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடியது.
வருகை தந்த கட்டளை அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து முகாம் வளாகத்தில் மரக்கன்று நாட்டப்பட்டது. அன்றைய நிகழ்வின் ஒரு பகுதியாக, கட்டளை அதிகாரி படையினருக்கு உரையாற்றுகையில் தனது கருத்துக்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார். பின்னர், அவர் குழு படம் எடுத்து கொண்டதுடன், அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்.