08th December 2024 18:19:30 Hours
பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் சி.எஸ் முனசிங்ஹ டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜீ அவர்களுக்கு 2024 டிசம்பர் 06 திகதி பிரியாவிடை அளிக்கப்பட்டது. பீரங்கி படையணியின் முறைமைகள் மற்றும் மரபுகளுக்கு ஏற்ப, பீரங்கி படையணி தலைமையகத்தில் பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.
வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் படையணி தலைமையக நினைவுத் தூபியில் மலர் வளையம் வைத்ததுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. படையணி தலைமையக படையினரால் வெளியேறும் மேஜர் ஜெனரல் சி.எஸ் முனசிங்ஹ டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜீ அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன் உணவகத்தில் சிரேஷ்ட அதிகாரியை கௌரவிக்கும் வகையில் ஒரு மாபெரும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை பீரங்கிப் படையணி அதிகாரிகளால் அதிகாரிகள் உணவகத்தில் இரவு விருந்துபசாரம் நடத்தப்பட்டதுடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பீரங்கி படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவியர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.