07th December 2024 22:39:34 Hours
24 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் எச்சிஎல் கலப்பத்தி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 4 டிசம்பர் 2024 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.
இராணுவ மரபுகளுக்கு இணங்க, புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், அவர் தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் குழு படம் எடுத்துகொள்ளப்பட்டதுடன் வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.
படையினருக்கு உரையாற்றிய தளபதி, தொழில்முறை, ஒருமைப்பாடு மற்றும் செயல்பாட்டு சிறப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அனைத்து நிலையினருடான தொடர்ப்பினை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற அனைத்து நிலையினருடான தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் நிறைவுற்றன. இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.