07th December 2024 06:50:31 Hours
நவம்பர் 14ஆம் திகதி உலக நீரிழிவு தினத்தைக் குறிக்கும் வகையில், கொழும்பு இராணுவ மருத்துவமனை, இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 04 டிசம்பர் 2024 அன்று மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது. இந்த நிகழ்வு "ஒரு ஆரோக்கியமான இராணுவம் ஆரோக்கியமான தேசம்" என்ற கருப்பொருளின் கீழ் ஆரோக்கியமான, தொற்றுநோயற்ற இராணுவத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
கால் நரம்பு பரிசோதனைகள், இரத்த அழுத்த சோதனைகள், இரத்த சர்க்கரை பரிசோதனை, ஊட்டச்சத்து மற்றும் மனநல ஆலோசனைகள், எடை முகாமைத்துவம் குறித்த வழிகாட்டுதல் மற்றும் நீரிழிவு தொடர்பான கண் சிக்கல்கள் பற்றிய விழிப்புணர்வு உள்ளிட்ட முக்கிய சுகாதார சேவைகளை இந்த திட்டம் வழங்கியது.
சிறப்பு விரிவுரைகளை "சரியான உணவு பழக்கவழக்கங்கள் மூலம் நீரழிவு நோயை நிர்வகித்தல்" என்ற தலைப்பில் திரு என் எம் எஸ் ஹெட்டிகெதர அவர்களும் ஒரு "உடற்பயிற்சி திட்டம்" என்ற தலைப்பில் பணிநிலை சார்ஜன் டி எல் ஜி பிரியதர்சன அவர்களும் ஆற்றினர்.