Header

Sri Lanka Army

Defender of the Nation

07th December 2024 07:11:52 Hours

வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

பிரிகேடியர் எஸ்ஏ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 2024 டிசம்பர் 5 ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அவரது புதிய பதவியினை குறிக்கும் முகமாக சிரேஷ்ட அதிகாரி தனது புதிய அலுவலகத்தில் மத அனுஷ்டானங்கள் மற்றும் சடங்குகளுக்கு மத்தியில், சுப நேரத்தில் முறையான ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டு அவரது புதிய நியமனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.