Header

Sri Lanka Army

Defender of the Nation

06th December 2024 11:37:33 Hours

இராணுவ வழங்கல் பாடசாலையில் நடைபெற்ற வழங்கல் பணிநிலை பாடநெறி எண்.10 இன் பட்டமளிப்பு விழாவில் இராணுவத் தளபதி

வழங்கல் பணிநிலை பாடநெறி எண்.10 இன் பட்டமளிப்பு விழா 05 டிசம்பர் 2024 அன்று ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார். வருகை தந்த தளபதியை, இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ஆர்.டி. லொகுதொடஹேவா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.

நிர்வாகம் மற்றும் வழங்கலில் முதன்மையான தொழில்முறை பாடநெறியாக அங்கீகரிக்கப்பட்ட வழங்கல் பணிநிலை பாடநெறி, இலங்கை இராணுவத்தின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்படுகிறது. இந்த ஆண்டு முழுவதும், முழுநேர பாடநெறியாக, வெற்றிகரமாக பெயருக்குப் பின்னர் 'எல்எஸ்சீ' என்ற பட்டத்தை சூட்டுவதுடன் நிறைவடைகிறது. மேலும் இராணுவ வழங்கல் பாடசாலையானது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கல் முகாமைத்துவத்தில் முதுகலை வணிக நிர்வாகத்தை (எல்எம் இல் எம்பிஏ) வழங்குகின்றது.

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 24 அதிகாரிகள், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் மற்றும் ஜாம்பியன் இராணுவத்தைச் சேர்ந்த 1 அதிகாரி ஆகியோரை உள்ளடக்கிய 27 மாணவ அதிகாரிகளின் பங்கேற்புடன் 2024 ஜனவரி 03 ஆம் திகதி வழங்கல் பணிநிலை பாடநெறி எண். 10 ஆரம்பமாகியது.

சிறப்பு விருந்தினர்களால் மங்கல விளக்கு ஏற்றியதுடன் விழா ஆரம்பமாகியதுடன் வருகைதந்தவர்கள் இராணுவப் பாடலுக்கு எழுந்து நின்றனர். பின்னர் உயிரிழந்த போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பாடநெறி நடவடிக்கைகளை சிறப்பிக்கும் ஆவணப்படம் திரையிடப்பட்டதுடன், இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதி வரவேற்புரை நிகழ்த்தினார்.

பிரதம விருந்தினரால் பட்டதாரிகளுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, அதே வேளையில் கல்வித் திறனை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் மேஜர் வி.எஸ்.கே. சமரவிக்ரம அவர்கள் சிறந்த மாணவர் அதிகாரியாகவும் சிறந்த வழங்கல் திட்டமிடுபவராகவும் அங்கீகரிக்கப்பட்டார்.

விழாவின் போது, இராணுவ வழங்கல் பாடசாலையின் வருடாந்த இதழான தி கோல்டன் லொக் 2024 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதுடன், பிரதம விருந்தினர் மற்றும் ஏனைய சிறப்பு விருந்தினர்களுக்கும் வழங்கப்பட்டது.

இராணுவத் தளபதியின் வருகையைப் பாராட்டி இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதியினால் அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், இராஜதந்திர பணிகளின் தலைவர்கள், இராஜதந்திர படை உறுப்பினர்கள், இராணுவ வழங்கல் பாடசாலையின் நிர்வாகக் குழு, கல்வி நிர்வாக உறுப்பினர்கள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பட்டதாரிகளின் குடும்பத்தினர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.