Header

Sri Lanka Army

Defender of the Nation

05th December 2024 19:45:39 Hours

12 வது காலாட் படைப்பிரிவினரால் சிரமதான பணி

ஆயுர்வேத வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க 12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2024 டிசம்பர் 03 ம் திகதி பெலியத்த மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் சிரமதான பணியை மேற்கொண்டனர்.

இப்பணியின் போது, மருத்துவமனை வளாகத்தை துப்புரவு செய்த படையினர், மருத்துவமனை வளாகத்தில் (ஒசு உயன) மூலிகை தோட்டம் அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்தனர்.

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீகேடப்ளியூடப்ளியூஎம்ஜேஎஸ்பிடப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த சமூக நலத்திட்டம் நடாத்தப்பட்டது. இராணுவத்தினரின் இச்செயலுக்கு மருத்துவமனை ஊழியர்கள் இதயப்பூர்வமான பாராட்டுகளை தெரிவித்தனர்.