Header

Sri Lanka Army

Defender of the Nation

05th December 2024 20:50:55 Hours

141 வது காலாட் பிரிகேடின் ஏற்பாட்டில் "ஒரு பெருமைமிக்க சிப்பாய்" என்ற தலைப்பில் விரிவுரை ஏற்பாடு

141 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், "ஒரு பெருமைமிக்க சிப்பாய்" என்ற உளவியல் விரிவுரை 04 டிசம்பர் 2024 அன்று வெயங்கொடை பிரிகேட் தலைமையகத்தில் நடைபெற்றது.

பயிற்சி நாள் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அமர்வு, இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களாக தனிப்பட்ட வளர்ச்சி, சமூக விழுமியங்கள் மற்றும் தொழில்முறை பொறுப்புகள் பற்றிய புரிதலை மேம்படுத்தும் அதே வேளையில், வீரர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

12 அதிகாரிகளும் 142 சிப்பாய்களும் இந்நிகழ்ச்சியில் பங்குபற்றியதுடன், ஊடகம் மற்றும் உளவியல் செயல்பாட்டு பணிப்பகத்தின் மேஜர் எம்.எச்.எம்.எஸ். பண்டார எல்எஸ்சீ அவர்களினால் விரிவுரை நிகழ்த்தப்பட்டது.