Header

Sri Lanka Army

Defender of the Nation

05th December 2024 20:59:02 Hours

51 வது காலாட் படைப்பிரிவு தளபதி கடமை பொறுப்பேற்பு

இலங்கை சிங்க படையணியின் மேஜர் ஜெனரல் எம்பஎனஏ முதுமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2024 டிசம்பர் 02 அன்று கோப்பாய் 51 வது காலாட் படைப்பிரிவின் 35 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.

நியமிக்கப்பட்ட புதிய தளபதியை பணிநிலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றதுடன், 14 வது கஜபா படையணி படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கி கௌரவித்தனர்.

அதன் பின்னர், மகா சங்கத்தினரின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் தளபதி தனது கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். தொடர்ந்து மாங்கன்று நாட்டிய அவர் படையினருக்கு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.