Header

Sri Lanka Army

Defender of the Nation

05th December 2024 21:25:01 Hours

இலங்கை கவச வாகன படையணியின் போர்வீரர்களுக்கு நினைவஞ்சலி

இலங்கை கவச வாகன படையணியின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2024 நவம்பர் 29 அன்று அனுராதபுரம், கலத்தேவ, போர் வீரர்கள் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இராணுவ தலைமையகத்தின் உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். வருகை தந்த படையணியின் படைத் தளபதி, கவச வாகன பிரிகேட் தளபதி மற்றும் நிலைய தளபதி ஆகியோரால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க பிரதம அதிதி, இலங்கை கவச வாகன படையணியின் போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுடன், இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்க தம் இன்னுயிரை தியகம் செய்த போர்வீரர்களுக்கு மலர் வைத்து மரியாதை அஞ்சலி செலுத்தினார்.