05th December 2024 21:52:02 Hours
ஹந்தானை மலைத்தொடரில் சிக்கித் தவித்த, கொழும்பு பிரதேச பிரபல பாடசாலையொன்றின் 16 முதல் 17 வயதுக்குட்பட்ட 10 மாணவர்களைக் கொண்ட குழுவை 111 வது காலாட் பிரிகேட் படையினர் 2024 டிசம்பர் 04 அன்று மீட்டுள்ளனர். சுற்றுலாவிற்காக கண்டிக்கு சென்றிருந்த மாணவர்கள் பாதுகாப்பற்ற பிரதேசத்தில் ஆய்வு மேற்கொண்ட போது அவர்களில் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் ஆபத்தான நிலைக்கு உள்ளாகி இருந்தார். மேலும் பனிமூட்டம் காரணமாக அவர்களின் நிலைமை மோசமாக்கியதுடன், அதன் காராணமாக திரும்புவதற்கான தெளிவான வழியின்றி அவர்கள் சிக்கித் தவித்தனர்.
இச்செய்தி கிடைக்கப்பெற்றதும், 111 வது காலாட் பிரிகேட் மற்றும் 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி ஆகியவற்றின் இராணுவ வீரர்கள் அக்குழுவை பத்திரமாக மீட்டனர். நடவடிக்கையை இரவு 8.00 மணியளவில் ஆரம்பித்ததுடன் அதிகாலை மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு கீழே கொண்டுவந்துள்ளனர்.