05th December 2024 21:56:14 Hours
வெளிசெல்லும் மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணியில் 4 டிசம்பர் 2024 அன்று பிரியாவிடை வழங்கப்பட்டது.
வருகை தந்த அவரை இலங்கை சிங்க படையணியின் பிரதி நிலைய தளபதி மரியாதையுடன் வரவேற்றார். பின்னர் வெளிசெல்லும் படைத் தளபதிக்கு பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர், படையணி நினைவு தூபியில் வீரமரணமடைந்த போர்வீரர்களின் நினைவாக மலர் அஞ்சலி செலுத்தியதுடன், அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.
மாலையில், ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு, அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவியார் பங்கேற்ற பிரியாவிடை விருந்து வழங்கப்பட்டது. இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவையைப் பாராட்டி நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.