05th December 2024 22:05:58 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் வெளிச்செல்லும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சீபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு 03 டிசம்பர் 2024 அன்று பலாலி யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கினர்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி, பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்னர், சிரேஷ்ட அதிகாரி அனைத்து நிலையினருடனும் குழுப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், தனது பதவிக்காலத்தில் படையினர் ஆற்றிய பெறுமதிமிக்க சேவைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
2024 டிசம்பர் 04 அன்று, அவர் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் கருத்துக்களை பதிவிட்டதுடன், தனது பதவிக்காலத்தின் முடிவைக் குறிக்கும் வகையில் அலுவலக வளாகத்தில் அவரது படத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாளய்கள் கலந்துகொண்டனர்.