Header

Sri Lanka Army

Defender of the Nation

04th December 2024 20:00:42 Hours

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகம் மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவினால் வெளியேறும் தளபதிக்கு பிரியாவிடை

வெளிச்செல்லும் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கு கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகம் மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவினால் 2024 நவம்பர் 23 மற்றும் 03 டிசம்பர் 2024 அன்று பிரியாவிடை அளிக்கப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் வெளியேறும் தளபதி 03 டிசம்பர் 2024 அன்று, சம்பிரதாய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், முகாம் வளாகத்தில் மரக்கன்று நாட்டியதுடன், குழு படங்கள் எடுத்து, புதிய விரிவுரை அரங்கைத் திறந்து வைத்தார். பின்னர் அவர் படையினருக்கு உரையாற்றியதுடன் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்து ஆகியவற்றில் கலந்து கொண்டார்.

23 நவம்பர் 2024 அன்று, 24 வது காலாட் படைப்பிரிவின் படையினர் வெளியேறும் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்றனர். பின்னர் அவர் படையினருக்கு உரையாற்றியதுடன் மரக்கன்று நட்டு குழு படம் எடுத்துக்கொண்டார். நினைவுப் பரிசு மற்றும் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்து விருந்து உபசாரத்துடன் பிரியாவிடை நிறைவுற்றது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.