04th December 2024 16:41:55 Hours
143 வது காலாட் பிரிகேட் தனது 14வது ஆண்டு நிறைவை 2024 நவம்பர் 30 அன்று சவாலான காலநிலையையும் மீறி படையணி தலைமையக வளாகத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கொண்டாடியது.143 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேடடிபீ விமலசேன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
143 வது காலாட் பிரிகேட் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், படையணி பணிநிலை அதிகாரிகளால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, நிகழ்வைக் குறிக்கும் வகையில் குழு படம் எடுக்கப்பட்டது. இந்த நாளுக்கு முக்கியத்துவம் சேர்க்கும் வகையில், 143 வது காலாட் பிரிகேட் தளபதி அவர்கள், வளர்ச்சி மற்றும் நிலைத்திருக்கும் தன்மையின் அடையாளமாக, பிரிகேட் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டினார்.
பிரிகேட் ஊழியர்கள் மற்றும் பிரிகேடில் உள்ள சிவில் ஊழியர்களை உள்ளடக்கிய அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்துடன் கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன.