22nd November 2024 08:04:01 Hours
இலங்கை கிரிக்கெட் கழகத்தினால் நடத்தப்பட்ட ‘பி’ டி20 கிரிக்கெட் போட்டி 2024ல், இராணுவ விளையாட்டுக் கழகம் இரண்டாமிட கிண்ணத்தை பெற்றுக் கொண்டது. இப்போட்டியில் 12 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் போட்டியிட்டன.
முதல் சுற்றில் இராணுவ விளையாட்டுக் கழக அணி மொரட்டுவ விளையாட்டுக் கழகம், விமானப்படை விளையாட்டுக் கழகம், மலாய் விளையாட்டுக் கழகம், கண்டி கிரிக்கெட் கழகம், ஐக்கிய தெற்கு கிரிக்கெட் கழக அணிகளுடன் போட்டியிட்டது. அரையிறுதிக்கு முன்னேறிய பின்னர், ஓல்ட் தர்மபாலியன்ஸ் கிரிக்கெட் கழகத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து, மலாய் கிரிக்கெட் கழகக்கு எதிரான இறுதிப் போட்டியில் இடம் பிடித்தது.
இறுதிப் போட்டி 17 நவம்பர் 2024 அன்று கட்டுநாயக்க விமானப்படை மைதானத்தில் நடைபெற்றதுடன் மற்றும் இராணுவ கிரிக்கெட் கழக அணிகள் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 150 ஓட்டங்கள் என்ற போட்டி இலக்கை நிர்ணயித்தது. எனினும் மலாய் கிரிக்கெட் கழக அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை எட்டியது.
கோப்ரல் சந்திரபோஸ் கேஜீபி (சி/680094) போட்டியின் சிறந்த பந்துவீச்சாளராக 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தெரிவு செய்யப்பட்டார்.