24th November 2024 14:42:32 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமைய தளபதி மேஜர் ஜெனரல் எஸ் ஏ குலதுங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 3 வது இலங்கை இராணுவ போர்கருவி படையணி படையினரால் 2024 நவம்பர் 20 அன்று தேவன பியவர, திம்புலாகலவில் வீடு புனரமைப்பு செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இத் திட்டம் 3 வது இலங்கை இராணுவ போர்கருவி படையணி கட்டளை அதிகாரி மேஜர் பிடிஆர் பெரேரா பீஎஸ்சி எல்எஸ்சி ஏஏடீஓ அவர்களின் மேற்பார்வையின் கீழ் திம்புலாகல விகாரை மகாநாயக்க தேரரின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியிலுள்ள நன்கொடையாளர்கள் இந்த வீட்டை நிர்மாணிப்பதற்கு நிதியுதவி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
வீடு வழங்கும் நிகழ்வின் போது பிரதம அதிதியால் உத்தியோகபூர்வமாக வீட்டு சாவி குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டதுடன், சம்பிரதாய சமய அனுஷ்டானங்களை தொடர்ந்து பயனாளிக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகளின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.